TVK | Ananth Moghan

மக்கள் பணியில் ஒரு பயணம்

K.K. Anand Mohan

K.K. ஆனந்த் மோகன் MBA., MLA

ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திரு.முத்துச்சாமி அவர்களை 22,250 வாக்குகள் என்ற மாபெரும் வாக்கு வித்யாசத்தில் வென்ற இளம் தொழில்முனைவோர்.


கல்வி கட்டணம் கட்ட முடியாமல் தவித்தவர்களுக்கும், மருத்துவமனையில் ஐசியூ(ICU) அறையில் உறவுகளை துடிக்க விட்டு வெளியில் பணம் இன்றி தவித்து நின்றவர்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்தவர்.

அறத்தால் ஆள்வதே அரசுக்கு பெருமை என்பதை நிலைநாட்ட வந்தவர். கனவு கண்ட சமூக மாற்றங்களை கண்முன் காட்ட துடிப்பவர்.

தன் பிள்ளைகள் பெறும் வசதிகளை போல் பிற பிள்ளைகளும் பெற வேண்டும் என நினைத்து சரிசமத்தை சமர்ப்பித்திட துணிந்து நிற்பவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை வழிநின்று, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித்தலைவர் திரு.விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறோம்.

Campaign Activity Banner

முக்கிய மக்கள் பணிகள் & செயல்பாடுகள்

உரிமைக் குரல்: கண்டன ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியலில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தமான S.I.R-க்கு எதிராக ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

வரலாற்று வீரவணக்கம்

சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரர் தீரன் சின்னமலை மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் போன்ற கொள்கைத் தலைவர்களின் வீரவணக்க நிகழ்வுகளை முன்னெடுத்து, அவர்களின் லட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

இளைஞர் அணி ஒருங்கிணைப்பு

ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள வார்டு, பேரூர் மற்றும் கிளை மட்டத்திலான இளைஞர் அணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கழகத்தின் கொள்கைகளை அடிமட்டத் தொண்டர்களிடம் கொண்டு செல்லும் பணியைச் செய்கிறோம்.